Monday 22 August 2011

யாகூவின் MoviePlex – முழுநீள திரைப்படங்களை ஆன்லைனில்

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூகிள் தனது ஆன்லைன் வீடியோ தளமான யூடியுபில் (Youtube) புதிய இந்தித் திரைப்படங்களை முழுதும் பார்த்து ரசிக்கும்படி Box Officeஎன்ற புதிய சேனலை அறிமுகப்படுத்தியது. யூடியுபில் பலரால் ஏற்றப்பட்ட முழுநீளப் படங்கள் இருந்தாலும் புதிய ஹிட் படங்களை மாதமொரு முறை ஒவ்வொன்றாகப் பார்க்கும் படி கொண்டு வந்தது. மற்றொரு பிரபல தளமான யாகூவும் (Yahoo) தன் பங்குக்கு என்ன செய்வது என்று கூகிளின் சேவையைப் பின்பற்றி ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. 

யாகூவின் இந்த புதிய சேவை MoviePlex என்று அழைக்கப்படுகிறது. இந்த இணையதளத்தில் முழுநீள பாலிவுட் இந்தித் திரைப்படங்களை உங்கள் கணிணியில் எப்போதும் எங்கேயும் பார்த்துக் கொள்ள முடியும். கூகிளின் BoxOffice இல் மாதத்திற்கு ஒரு புதிய படத்தை மட்டுமே வெளியிடுவார்கள். ஆனால் இதில் தரவேற்றப்பட்ட எல்லாப் படங்களையும் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். தற்போது 8 திரைப்படங்களைத் தரவேற்றியிருக்கிறார்கள். 


மேலும் பல படங்கள் விரைவில் இணைக்கப்பட உள்ளன. ஆனால் இதில் உள்ள குறை என்னவென்றால் இதில் இணைக்கப்படும் திரைப்படங்கள் Standard Version இல் இருப்பதால் பிளாஷ் வசதி இல்லாத கருவிகளில் பார்க்க இயலாது என்பதே. ஐபேடு மற்றும் சில மொபைல்களில் பிளாஷ் வசதி இருப்பதில்லை. கணிணியில் பார்ப்பதற்கு சிக்கல் ஏதும் இல்லை. 

இணையதளம் : Yahoo MoviePlex (நாங்களும் இருக்கோம்ல்ல) 

தொடர்புடைய பதிவு: 
புதிய இந்தித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்க YouTube BoxOffice 

No comments:

Post a Comment