Monday 22 August 2011

யாகூவின் MoviePlex – முழுநீள திரைப்படங்களை ஆன்லைனில்

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூகிள் தனது ஆன்லைன் வீடியோ தளமான யூடியுபில் (Youtube) புதிய இந்தித் திரைப்படங்களை முழுதும் பார்த்து ரசிக்கும்படி Box Officeஎன்ற புதிய சேனலை அறிமுகப்படுத்தியது. யூடியுபில் பலரால் ஏற்றப்பட்ட முழுநீளப் படங்கள் இருந்தாலும் புதிய ஹிட் படங்களை மாதமொரு முறை ஒவ்வொன்றாகப் பார்க்கும் படி கொண்டு வந்தது. மற்றொரு பிரபல தளமான யாகூவும் (Yahoo) தன் பங்குக்கு என்ன செய்வது என்று கூகிளின் சேவையைப் பின்பற்றி ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. 

யாகூவின் இந்த புதிய சேவை MoviePlex என்று அழைக்கப்படுகிறது. இந்த இணையதளத்தில் முழுநீள பாலிவுட் இந்தித் திரைப்படங்களை உங்கள் கணிணியில் எப்போதும் எங்கேயும் பார்த்துக் கொள்ள முடியும். கூகிளின் BoxOffice இல் மாதத்திற்கு ஒரு புதிய படத்தை மட்டுமே வெளியிடுவார்கள். ஆனால் இதில் தரவேற்றப்பட்ட எல்லாப் படங்களையும் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். தற்போது 8 திரைப்படங்களைத் தரவேற்றியிருக்கிறார்கள். 


மேலும் பல படங்கள் விரைவில் இணைக்கப்பட உள்ளன. ஆனால் இதில் உள்ள குறை என்னவென்றால் இதில் இணைக்கப்படும் திரைப்படங்கள் Standard Version இல் இருப்பதால் பிளாஷ் வசதி இல்லாத கருவிகளில் பார்க்க இயலாது என்பதே. ஐபேடு மற்றும் சில மொபைல்களில் பிளாஷ் வசதி இருப்பதில்லை. கணிணியில் பார்ப்பதற்கு சிக்கல் ஏதும் இல்லை. 

இணையதளம் : Yahoo MoviePlex (நாங்களும் இருக்கோம்ல்ல) 

தொடர்புடைய பதிவு: 
புதிய இந்தித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்க YouTube BoxOffice 

ஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 wep sites

ஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும், பிரம்மாண்டமாகவும் வித்தியாசமான கதை அம்சம் கொண்டும் ஹாலிவுட் படங்கள் வருவதால் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை கொண்டு உள்ளது. நம்மில் பெரும்பாலானவர்கள் ஹாலிவுட் திரைப்படங்களை விரும்பி பார்ப்போம் ஆனால் அதில் உள்ள ஒரே பிரச்சினை மொழி தான். சாதரணமா நம்ம ஊர் இங்க்லீஸ்ல பேசுனாலே பேசுறவங்க வாயை மொரச்சி பார்ப்போம் இதுல அவனுங்க பேசுற இங்க்லிச எங்க புரிஞ்சிக்கறது.  வசனம் எதுவும் புரியாம வெறும் கதையை வச்சி படம் பார்த்துட்டு வருவோம்.

நம்மளை போன்றவர்களுக்காக வந்தது தான் டப்பிங். ஆங்கில திரைப்படங்களை மொழி பெயர்த்து தமிழில் வெளியிடுவார்கள். ஜாக்கிசான் திடீர்னு "இன்னா நைனா சோக்கா கீற" என்று நாம சென்னை தமிழ்ல பேசுவார். இது பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் வசனங்களை புரிந்து படம் பார்ப்பதற்கு சுலபமாக இருக்கும். இது போன்ற தமிழ் டப்பிங் செய்யப்பட படங்களை இணையத்தில் இலவசமாக பார்ப்பதற்கு பல இணைய தளங்கள் உள்ளது. அதில் சிறந்த 10 இணைய தளங்களை உங்களுக்கு இங்கே அறிமுக படுத்துகிறேன்.

1) Cooltamil
இந்த தளத்தில் தமிழில் டப்பிங் செய்யப்பட சிறந்த ஆங்கில படங்கள் உள்ளன. இந்த தளத்தில் மேலும் தமிழ் திரைப்படங்களையும் காணலாம். தமிழ் மொழியில் ஆங்கில படங்களை பார்க்க நினைப்பவர்களுக்கு இந்த தளம் முக்கியமானது.

பழைய படங்களில் இருந்து புதிய ஹாலிவுட் படங்கள் வரை நிறைய படங்கள் இந்த தளத்தில் மொழிபெயர்க்க பட்டு உள்ளது. ஹாலிவுட் பட விரும்பிகளுக்கு இந்த தளமும் மிகவும் பயன்படும்.

இந்த தளத்திலும் பழமையான படங்களில் இருந்து புதிய படங்கள் வரை தமிழாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

மிகவும் பிரபலமாகாத தளம் ஆனால் நிறைய படங்கள் உள்ளது.


குறைந்த அளவு திரைப்படங்களே இருந்தாலும் சில படங்களை டவுன்லோட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. 

இந்த தளமும் பயனுள்ள தளம். மிக நல்ல படங்களை வாசகர்களுக்கு பகிர்ந்துள்ளது.

இந்த தளத்தில் குறைந்த அளவு படங்களே காணப்படுகின்றன.


இந்த தளத்தில் ஆங்கில படங்கள் மட்டுமின்றி பிற மொழி படங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு அளிக்கப் படுகிறது.

மிகவும் குறைந்த அளவு படங்களே உள்ளது இந்த இணைய தளத்தில் 

இந்த தளத்திலும் பெரும்பாலான ஆங்கில படங்கள் நிரந்து காணப்படுகிறது. இந்த தளமும் வாசகர்களுக்கு ஒரு சிறந்த தளமாகும். 

இந்த தளங்களில் சென்று வாசகர்கள் ஹாலிவுட் திரைப்படங்களை இலவசமாக தமிழில் பார்த்து ரசிக்கலாம்.

five games,one software


மாதுளம்பழம் பார்த்திருப்பீர்கள். அதனை உடைத்தால் நிறைய மாதுளை முத்துக்கள் இருக்கும். அதைப்போல இந்த சின்ன சாப்ட்வேரினை ஓப்பன்செய்தால் இதில் வெவ்வேறான 5 வகை விளையாட்டுக்கள் உள்ளது.65 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்க்ம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன்செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள பிளே பட்டனை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.மொத்தம் 5 வகையான விளையாட்டுக்கள். தேவையான விளையாட்டினை கர்சர் மூலம் தேர்வு செய்யுங்கள்.
இதில்முதலில் உள்ள Klopodrom-very fast food கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.விளையாட தொடங்கலாம்.
 மற்றும் ஒரு விளையாட்டு கீழே-
கார் விளையாட்டு கீழே-

விளையாடி பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்

யூடியுப் வீடியோக்களை HD வடிவில் டவுன்லோட் செய்ய


இணையத்தில் வீடியோக்களை பகிரும் தளமான யூடியுப்பில் இருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்ய நிறைய மென்பொருட்களும், இணைய தளங்களும், நீட்சிகளும் உள்ளன. ஆனால் இன்று நாம் பார்க்க போகும் இந்த மென்பொருள் சற்றே வித்தியாசமானதும், பயனுள்ளதும் கூட. இந்த மென்பொருள் மூலம் ஒரு குறிப்பீட வீடியோவை பல அளவுகளில் பல பார்மட்டுகளில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மற்றும்இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக தொடர்பு வீடியோக்களை யூடியுப் தளத்திற்கு செல்லாமலே இங்கிருந்தே டவுன்லோட் செய்து கொள்ளலாம். 
மென்பொருளின் பயன்கள்:
  • ஒரே நேரத்தில் பல வீடியோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். 
  • முற்றிலும் இலவசமான மென்பொருள்.
  • தொடர்பு வீடியோக்களை டவுன்லோட் செய்ய வேண்டுமென்றால் மீண்டும் யூடியுப் தளத்திற்கு செல்ல தேவையில்லை.
  • வீடியோக்களை வேகமாக டவுன்லோட் செய்கிறது.
  • வீடியோக்களை FLV,MP4 பார்மட்களில் பல்வேறு அளவுகளில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  • வீடியோக்களை Preview பார்க்கும் வசதி இருப்பதால் வீடியோ நன்றாக இருந்தால் மட்டுமே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  • யூடியுப் வீடியோக்களில் இருந்து ஆடியோவை மட்டும் தனியே பிரிக்க Extract FLV audio வசதி.
  • மேலும் History, Batch போன்ற கூடுதல் வசதிகளும் இந்த மென்பொருளில் உள்ளது.
பயன்படுத்தும் முறை:
  • முதலில் இந்த மென்பொருளை கீழே உள்ள லிங்கில் சென்று உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அடுத்து மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
  • மென்பொருளில் Youtube URL இடத்தில் வீடியோவின் URL கொடுக்கவும். 
  • URL கொடுத்தவுடன் அந்த வீடியோவின் டவுன்லோட் செய்ய வேண்டிய தரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • குறிப்பிட்ட வீடியோ HD வடிவில் இருந்தால் மட்டுமே HD வடிவில் டவுன்லோட் செய்ய முடியும் இல்லையேல் சாதரணமாக தான் டவுன்லோட் ஆகும்.
  • அடுத்து Preview பார்க்க வேண்டுமென்றால் பார்த்து கொண்டு கடைசியில் டவுன்லோட் பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் அந்த வீடியோ உங்கள் கணினியில் டவுன்லோட் ஆகிவிடும்.
  • வலது புறத்தில் பார்த்தல் இந்த வீடியோவின் Related videos காணப்படும். அதில் ஏதேனும் ஒன்றை டவுன்லோட் செய்ய நினைத்தால் அதன் மீது கிளிக் செய்தாலே போதும்  போதும் அந்த வீடியோவை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  • ஒரே நேரத்தில் பல வீடியோக்களை டவுன்லோட் செய்யும் பொழுது டவுன்லோடின் வேகம் இணைய வேகத்திற்கு ஏற்ப குறையும். 
இனி நீங்கள் எந்த வீடியோவை சுலபமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். 

மென்பொருளை டவுன்லோட் செய்ய - Youtube HD Transfer

கூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே கிளிக்கில் டவுன்லோட்


கூகுள் தளம் வாசகர்களுக்காக சில பயனுள்ள மென்பொருட்களை அளிக்கிறது. இந்த மென்பொருட்களை எவ்வாறு டவுன்லோட் செய்வது என பார்ப்போம். இந்த பட்டியலில் கூகுளின் மென்பெருட்கள் மட்டுமின்றி கூகுல் பரிந்துரை செய்யும் சில பயனுள்ள மென்பொருட்களும்(Firefox, Avast, Skype....) உள்ளன. இந்த மென்பொருட்களையும் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த Packல் 14 இலவச மென்பொருட்கள் உள்ளது. இதில் 6 மென்பொருட்கள் கூகிளின் மென்பொருட்களாகும். இதர மென்பொருட்கள் வேற்று நிறுவனங்களின் மென்பொருட்கள். விண்டோஸ் XP, Vista, 7 ஆகிய இயங்கு தளங்களில் இந்த மென்பொருளை நிறுவலாம். 
  • இந்த மென்பொருட்களை டவுன்லோட் செய்ய கீழே கொடுத்துள்ள லிங்கில் செல்லுங்கள். 
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் இதில் மென்பொருட்களின் பட்டியல் இருக்கும். 
  • அதில் உங்களுக்கு தேவையான உங்கள் கணினியில் இல்லாத மென்பொருட்களை டிக் செய்து கொள்ளுங்கள்.

  • தேவையானதை டிக் செய்து கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தினால் போதும் நீங்கள் டிக் செய்த மென்பொருட்கள் உங்கள் கணினியில் டவுன்லோட் ஆகிவிடும். 
  • பின்பு இன்ஸ்டால் செய்து நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 
இதில் உள்ள மென்பொருட்கள் பற்றி ஒரு சிறிய முன்னோட்டம் கீழே பார்ப்போம்.

Google Chrome - இணையத்தில் உலவுவதர்க்காக கூகுள் உருவாக்கிய இணைய உலவி ஆகும். உலகளவில் அதிகம் உபயோகிக்கப்படும் உலவிகளில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. 

Google Earth - உலகின் எந்த இடத்தையும் எளிதாக சுற்றி பார்க்கலாம் அதுவும் நிஜத்தில் இருப்பது போல. மற்றும் இந்த தளத்தில் Hotels, tourist place, driving directories போன்ற வசதிகளும் உள்ளது. 

Google Apps - கூகுளின் சேவைகளான ஜிமெயில்,காலெண்டர் போன்ற சேவைகளை நம் கணினியில் பயன்படுத்து கூகுள் உருவாக்கிய மென்பொருளாகும்.

Google Toolbar for Internet Explorer - IE உலவியில் பயன்படுத்த கூகுள் உருவாக்கிய மென்பொருள். இதன் மூலம் தேவையில்லாத popups உருவாவதை தடுக்கலாம், இணைய படிவங்களை நிரப்ப Auto fill வசதியும் உள்ளது.

Spyware Doctor with Antivirus- கணினியில் உள்ள தீங்கிழைக்கும் Spyware, adware, trojans போன்றவற்றை நீக்கி கணினியை பாதுகாப்ப வைத்துக்கொள்ள.

Avast - கணினியை பாதுகாப்ப வைத்துக்கொள்ளும் இலவச ஆண்டி வைரஸ் மென்பொருளாகும்.

Immunet Protect Antivirus - கணினியை பாதுகாப்ப வைத்துக்கொள்ளும் இலவச ஆண்டி வைரஸ் மென்பொருளாகும்.

Google Desktop - கூகுளின் இன்னொரு பயனுள்ள மென்பொருள் நம்முடைய டெஸ்க்டாப் விண்டோவில் சைட்பாரில் கூகுளின் வசதிகளை உபயோகிக்கும் வசதி.

Google Picasa - நம்முடைய போட்டோக்களை எடிட் செய்யவும், நண்பர்களுடன் பகிரவும் கூகுள் உருவாக்கிய மென்பொருள்.

Adobe Reader - இது பெரும்பாலும் நம் அனைவரும் கணினியிலும் இருக்கும் ஒரு மென்பொருளாகும். PDF பைல்களை நம் கணினியில் பார்க்க அடோப் நிறுவனம் உருவாக்கிய மென்பொருளாகும்.

Mozilla Firefox - மிகப்பிரபலமான இணைய உலாவியாகும். கூகுள் க்ரோம் இந்த உலவியை பின்னுக்கு தள்ளி தான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

Google Talk - நம் நண்பர்களுடன் அரட்டை அடிக்க

Skype- குறைந்த விலையில் தொலைபேசி அழைப்பு பண்ணலாம்.

Real Player  - வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் மீடியா பிளேயார்.

WebM for IE9 - IE உலவியில் இணைய வீடியோக்களை காண 

மென்பொருட்களை டவுன்லோட் செய்ய-  Google Packhttp://pack.google.com/intl/en/pack_installer.html?version=2

Sunday 21 August 2011

kathala natba





நட்பா? காதலா?
நட்பா? காதலா?

நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?
நண்பன் கேட்டான்

நான் முதலில் கற்றுக் கொண்டது
நட்பு தான்

நான் இது வரையில் காத்து வருவது
நட்பு தான்

என்னை நானாக பார்த்தது
நட்பு தான்

காதலின் இனிமையான பாகம்
நட்பு தான்

எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
நட்பின் காதலும்,
காதலின் நட்பும்.

Writing By gopikrishnan

Friday 19 August 2011